செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில் இங்கு செல்போன் கோபுரம் அமைப்பதால், கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் எனவும், இதனால் குழந்தைகள் முதியோருக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி, அப்பகுதி மக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இப்பணிகளை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story