செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

ஆலங்குளம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் உயர்கோபுரம் அமைக்க முடிவு செய்து, அதற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செல்போன் கோபுரத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து தக்க முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story