சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் 30-வது வார்டுக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது தலைமையில் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story