அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முன்றனர்.
ராணிப்பேட்டை
பனப்பாக்கம் பேரூராட்சி, தென்மாம்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 3 வேப்பமரங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கு வேப்பமரங்களை அகற்ற ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று பனப்பாக்கம் பேரூராட்சியில் மரத்தை வெட்ட ஏலம் விடப்பட்டது.
இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் மரங்களை வெட்ட முயன்றபோது அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பனப்பாக்கம் - காஞ்சிபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் மற்றும் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story