தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

துடியலூர்அருகே தனியார் பார் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
கோயம்புத்தூர்
துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் சுப்பிரமணிபாளையம் அருகே கே.என்.ஜி. புதூர் இருந்து ஜி.என்.மில்ஸ் ரோடு எம்.ஜி.ஆர். நகர் அருகே அக் ஷயா கார்டன் திருமண மஹாலில் பாருடன் கூடிய தனியார் ஓட்டல் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக் கள் தனியார் பாரை முற்றுகையிட்டனர்.
இதை அறிந்த துடிய லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், துடியலூர் வடக்கு தாசில்தார் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களிடம் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Next Story






