வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு


வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
x

வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி

குறை தீர்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 501 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர்.

இதில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை கொடுத்த மனுவில், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம், போதை மருந்து, போதை ஊசி, கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும். சாராயம் குடித்து பலியான குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிய முதல்-அமைச்சர், வயலில் வேலை செய்யும்போது பலியான விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், கட்டுமான பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் வருகிற 30-ந்தேதி காலை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த இருப்பதாக, கூறப்பட்டு இருந்தது.

இலவச வீட்டுமனை பட்டா

இதேபோல் வாழவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், அன்னை தெரசா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 383 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது, இந்த பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் கொண்டயம்பேட்டை பகுதியில் அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும். மயானத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கொண்டயம்பேட்டை மயானத்தில் நாங்கள் கொடுத்த மனுக்களை எரிக்கும் போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story