அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு


அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு
x

தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். புதுக்கோட்டை அருகே தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதியாக குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

அரசு பஸ் வசதி

புதுக்கோட்டையில் இருந்து செம்பாட்டூருக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது மாலை 4.30 மணிக்கு மட்டுமே பஸ் வந்து செல்கிறது. காலை 8.30 மணிக்கு வருவதில்லை. எனவே காலையிலும் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் பகுதி நேர ேரஷன் கடை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story