கீழப்புலியூர் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கீழப்புலியூர் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x

கீழப்புலியூர் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கூடாது என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கீழப்புலியூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கீழப்புலியூர், கே.புதூர், சிறுகுடல், சிலோன் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை அளந்து ஆய்வு செய்ததாக தெரிகிறது. அவ்வாறுஅங்கு அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடமும், சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டிடமும் கட்டுவதற்கு போதிய இடம் இருக்காது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளி வளாகத்தில், பள்ளி அருகே கட்டாமல் கீழப்புலியூர் கிராம ஊராட்சியில் மாற்று இடத்தை தேர்வு செய்து கட்ட வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story