சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்


சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
x

கந்திலி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

கந்திலி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே சவுடேகுப்பம் ஊராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சவுடேகுப்பம் ஊராட்சியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

நடவடிக்கை எடுக்கவில்லை

இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story