காட்டாம்பூர் கண்மாயில் சாலை அமைக்க முயற்சி-பொதுமக்கள் எதிர்ப்பு
காட்டாம்பூர் கண்மாயில் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூர் கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த கண்மாய் அருகே வீட்டுமனைக்காக சாலை அமைக்க முயற்சி நடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேலிடம் வருவாய் துறையினரிடமும் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேர்மன் சண்முகவடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்கள் மூலமாக சாலை அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story