குழித்துறையில் வடிகால் ஓடை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


குழித்துறையில் வடிகால் ஓடை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x

குழித்துறையில் வடிகால் ஓடை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறை கல்பாலத்தடி கோவில் அருகிலிருந்து இடவிளாகத்திற்கு செல்லும் ரோட்டில் ஒருபுறம் நெய்யாறு இடது கரை கால்வாயும், மறுபுறம் ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளது

இந்த ரோட்டின் குறுக்கே கல்பாலத்தடி கோவில் அருகே நிலவியல் ஓடை பல ஆண்டுகளாக உள்ளது. மழை காலங்களில் விவசாய நிலங்களில் மழை நீர் பாய்ந்து இந்த வடிகால் ஓடை வழியாக நெய்யாறு இடது கரை சானலுக்கு பாய்ந்து வந்தது இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது தனியார் சார்பில் கட்டுமான பணி நடைபெறுவதால் நிலவியல் ஓடை அடைக்கப்பட்டது இதனால் தற்போது பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால், வாழை போன்ற பயிர்கள் அழுகி பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வடிகால் ஓடையை திறந்து விட வலியுறுத்தி நேற்று கல்பாலத்தடி கோவில் அருகே பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இதற்கு குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. மாவட்ட தலைவர் ஐடன் சோனி, நகரத் தலைவர் ஜெயசிங், தி.மு.க. வர்த்தக அணி தலைவர் ஷாஜிலால், அ.தி.மு.க. நகர துணைத் தலைவர் அனில்குமார், நகராட்சி கவுன்சிலர் ஷாலின் சுஜாதா, தொழிலதிபர் பாபுராஜ், வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story