பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டம்


பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டம்
x

பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உள்ள வல்லம் கடைவீதிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். தற்போது வல்லத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தஞ்சை- திருச்சிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வல்லம் வழியாக செல்கின்றன. நேற்று வல்லம் கடைவீதி பகுதியில் பஸ்சிற்காக பொதுமக்கள் காத்திருந்தனர். தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த பஸ்கள் தொடர்ந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்போது வந்த ஒரு அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த பஸ்சும் நிற்காமல் சென்றதால் ஆத்திரத்தில் பயணிகள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து சற்று தூரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு வந்த அரசு பஸ் டிரைவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பஸ்சுக்கான காத்திருந்த பயணி ஒருவரை டிரைவர் தாக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்சை வழிமறித்து டிரைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் வல்லம்-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story