அறச்சலூர் பேரூராட்சி கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அறச்சலூர் பேரூராட்சி கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அறச்சலூர்
அறச்சலூர் பேரூராட்சி அலுவலகம் அங்குள்ள காங்கேயம் சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பழுதடைந்ததாக கூறி புதிய கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய அலுவலக கட்டிடம் கட்ட ரூ.99 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஓடாநிலை சமுதாயக்கூடத்தில் பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்காக, பழைய கட்டிடம் அமைந்து உள்ள பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் கட்டிடத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தொிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நம்ம ஊர் அமைப்பை சேர்ந்த பூபதி, பேரூராட்சி துணைத்தலைவர் துளசி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், 'பழைய கட்டிடம் நல்ல நிலையில் உள்ளதாகவும், பேரூராட்சி அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளதாகவும், வேண்டும் என்றால் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டலாம்,' என்றும் தெரிவித்தனர்.