அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மறியல்


அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள்  மறியல்
x

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

துவரங்குறிச்சியை அடுத்த லிங்கம்பட்டி கிராமத்தின் அருகே உள்ள மருங்கி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும், கிராமத்திற்கு தரமான சாலை, ரேஷன் கடை, சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, பொது குளியல் தொட்டி மற்றும் செட்டியார் குளம் அருகே உள்ள இடுகாட்டில் எரிமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்தை நடத்தினர். இதைஅடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போராட்டத்தின் போது, செவல்பட்டியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதில் பொதுமக்கள், எழுச்சித் தமிழர்கள் முன்னேற்ற கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story