பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x

பிச்சன்கோட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்த பள்ளி அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டம் ஊராட்சியில் அரசு பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மகாலிங்கம் தலைமை தாங்கினார். இந்த நிலையில் அதே ஊராட்சி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கூபை கூட்டம் நடைபெறும் பள்ளியில் எதிர் புறத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர் ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story