செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
ஆம்பூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
ஆம்பூர் இந்திரா நகர் 4-வது தெருவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story