மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x

தேவதானப்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் பெரியகுளம் தாலுகா அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பட்டாமாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா மாறுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெரியகுளம் தாசில்தார் ராணி முன்னிலை வகித்தார். முகாமில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். முடிவில் பெரியகுளம் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் இளங்கோ நன்றி கூறினார்.


Next Story