மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:45 PM GMT)

திருவாவடுதுறை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் 165 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். திருவாவடுதுறை கிராமங்களை சுற்றி உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கடந்த ஒரு மாத காலமாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன. பல்வேறு துறைகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நிறைவு நாளில் ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 94 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 43 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமில் 165 பயனாளிகளுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, குத்தாலம் தாசில்தார் கோமதி, குத்தாலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதா பானு சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story