மக்கள் தொடர்பு முகாம் 28-ந் தேதிக்கு தள்ளி வைப்பு


மக்கள் தொடர்பு முகாம் 28-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்ப்பாடியில் இன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு முகாம் 28-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுகா ரிஷிவந்தியம் குறுவட்டத்துக்குட்பட்ட கீழ்ப்பாடி கிராமத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற இருந்த மக்கள்தொடர்பு முகாம் நிர்வாக காரணங்களால் வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. இதில் நிலப்பட்டா, வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை மற்றும் ஏனைய துறைகளின் நலத்திட்ட உதவிகளை பெருமளவில் பயனாளிகள் பெற முன்னதாகவே கீழ்ப்பாடி கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை சங்கராபுரம் தாசில்தார் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story