மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடி அருகே ஓரிவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். ஓரிவயல் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி திருப்பதி வரவேற்றார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தொடர்ந்து 116 பயனாளிகளுக்கு ரூ.23.84 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ், கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story