மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கீழக்கோட்டூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் தாலுகா கீழக்கோட்டூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. இதற்கு விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு அளிக்கிறார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். எனவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மேற்படி முகாமில் கொடுத்து பயன்பெற வேண்டும் என கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story