போத்துவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 25-ந்தேதி நடக்கிறது


போத்துவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்    25-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 16 Aug 2022 10:05 PM IST (Updated: 16 Aug 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

போத்துவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 25-ந்தேதி நடக்கிறது.

விழுப்புரம்


செஞ்சி தாலுகா போத்துவாய் கிராமத்தில் 25-8-2022 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்களை விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனர். மேற்படி முகாமின்போது மாவட்ட கலெக்டர் மோகன் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து, பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story