மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

தாயில்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மண்டல துணை வட்டாட்சியர் அருளானந்தம் தலைமையில் நடைபெற்றது. சிவகாசி தாசில்தார் லோகநாதன், வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கலந்துகொண்டு 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் செய்திருந்தார். முடிவில் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் நன்றி கூறினார்.



Next Story