மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ராமநாதபுரம்

சாயல்குடி

சாயல்குடி அருகே எஸ்.கீரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். கடலாடி தாசில்தார் மரகத மேரி வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, எஸ்.கீரந்தை ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சப்-கலெக்டர், மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டு 178 பேருக்கு 9 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள், சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் செந்தில் வேல்முருகன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் சாந்தி, சாயல்குடி வருவாய் ஆய்வாளர் சேகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்


Related Tags :
Next Story