மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம்
மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடந்தது.
கரூர்
வேலாயுதம்பாளையத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. கடவூர் தாசில்தார் வெங்கடேசன், வெள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு இதற்கு குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பா தேவி தலைமை தாங்கி, 657 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 80 லட்சத்து 29 ஆயிரத்து 910 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், கடவூர் பகுதிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகள் நடைபெற முழு கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தை திருமணத்தை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார். இதில், கடவூர் ஒன்றிய ஆணையர்கள் ராணி, சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story