மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம்


மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம்
x

மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.மலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வெங்கடேசன், நங்கவரம் ஆர்.ஐ. சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில், ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story