காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x

கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று அங்குள்ள திருச்செந்தூர்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story