பொதுமக்கள் சாலை மறியல்
உப்புக்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தேனி
உப்புக்கோட்டை அருகே உள்ள குண்டல்நாயக்கன்பட்டியில் முதல் போக நெல் சாகுபடிக்காக வயல் மற்றும் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த இடத்திற்கு வந்த புவியியல் மற்றும் சுங்கவியல்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அனுமதியின்றி கனிம வளங்களை அள்ளுவதாக 4 டிராக்டர்களை பறிமுதல் செய்தார். இந்த நிலையில் தேனி-கம்பம் சாலையில் பாலகுருநாதபுரத்தில் டிராக்டர்களை பறிமுதல் செய்ததாக 4 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து குண்டல்நாயக்கன் பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தேனி-குச்சனூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story