குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

பவானிசாகர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்காரகுண்டி. இங்குள்ளவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள பவானிசாகர்- பண்ணாரி ரோட்டுக்கு நேற்று காலை 10.55 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், 'விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு 11.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து ெசன்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 35 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story