விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x

விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், திருவளர்சோலை அருகே உள்ள பனையபுரம் பகுதி திருப்பால்துறையை சேர்ந்தவர் கருப்பையா(வயது 55). இவர் மோட்டார் சைக்கிளில் பனையபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, கல்லணை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையறிந்த அப்பகுதி மக்கள், இதுபோன்று அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே விபத்துகளை தடுக்க சாலையில் வேகத்தடைகள் மற்றும் இரவில் மிளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story