பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 July 2023 1:30 AM IST (Updated: 27 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

காரமடையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

காரமடை

காரமடையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள்

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 16-வது வார்டில் குளத்துப்பாளையம், முல்லை நகர், கொண்டசாமி நகர், பயனியர் காலனி ஆகிய பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தல், குப்பைகளை சேகரித்தல், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தல், பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

சாலை மறியல்

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காரமடை-சிறுமுகை சாலையில் குளத்துப்பாளையம் பகுதியில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், மேற்கண்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறியதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story