பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை சேந்தங்குடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சேந்தங்குடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

மயிலாடுதுறை சேந்தங்குடியில் வடபாதி, தென்பாதி, வடக்குத்தெரு பகுதியில் செப்பனிடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ள சாலையை 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. சேந்தங்குடியில் டவுன் பஸ்கள் காலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.விபத்துக்களை தடுக்க தங்கள் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், சேந்தங்குடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் நேற்று சேந்தங்குடி மெயின்ரோட்டில் நீலிப்புலிகள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது வடவாதி தென்பாதி, வடக்கு தெரு சாலையை அமைத்து தர வேண்டும், விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும், டவுன் பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பன உளளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- சீர்காழி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story