அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.சி., ஓ.சி. பிரிவு மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை தற்போது வெளியூர் நபர்களுக்கு வழங்க இருப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி பொதுமக்கள் தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே இங்கு சிறிய வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். மேலும் பொதுமக்களுக்கு கொடுத்த இலவச வீட்டுமனை பட்டாவை பிரதமர் மோடி வீடு வழங்கும் திட்டம் அல்லது அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்ந்து வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

1 More update

Next Story