சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை


சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை
x

சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றிகையிட்டனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ளது பூவலை கிராமம். இங்கு உள்ள இருளர் காலனியைச் சேர்ந்தவர்களுக்கான சுடுகாட்டிற்கு முறையான பாதை மற்றும் சுற்றுசுவர் இல்லை. இத்தகைய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேற்கண்ட பணிகளுக்கான திட்ட அறிக்கை வழங்கப்பட்டு பல மாதங்களாகியும் அதற்கான பணிகள்இது வரை தொடங்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு சுடுகாட்டுக்கு பாதை மற்றும் சுற்று சுவர் அமைத்து தர கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அருள் முன்னிலை வகித்தார். இதில் பூவலை கிராமத்தை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, தாசில்தார் பிரீத்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் அப்பகுதியை மறு ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் தங்களது 4 மணி நேர போரட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story