100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மறியல்
சடையம்பட்டியில் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
காரையூர் அருகே சடையம்பட்டி அருகே மரவாமதுரை ஊராட்சியில் நீண்ட நாட்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை. பார்த்த வேலைக்கு நீண்ட நாட்களாகியும் ஊதியம் வழங்கவில்லை எனக்கோரி 100 நாள் பணியாளர்கள், பொதுமக்கள் சடையம்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், காரையூர் போலீசார் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை
அப்போது அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கவும், பார்த்த வேலைக்கு ஊதியம் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.