புழுதிக்காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி


புழுதிக்காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி
x

நெமிலி, பனப்பாக்கம் பகுதிகளில் புழுதிக்காற்று வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. அடிக்கடி மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதியில் நேற்று மதியம் வரை கடுமையான வெயிலுடன் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டனர்.

மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான காற்று வீசதொடங்கி பின்பு அது புழுதிக்காற்றாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

1 More update

Next Story