சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதி


சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதி
x

காரியாபட்டி அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

50 கிராமங்கள்

காரியாபட்டியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் சக்கரக்கோட்டை, சத்திரம் புளியங்குளம், ஆண்மை பெருக்கி, விட்டிலாரேந்தல், ஸ்ரீராம்பூர், எம். இலுப்பைகுளம், முடுக்கன்குளம், தேனூர், எஸ். மறைக்குளம், பனைக்குடி, சாலை இலுப்பைகுளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்காகவும், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் பெரும்பாலும் காரியாபட்டிக்கு தான் வந்து செல்கின்றனர். அதேபோன்று இந்த பகுதி மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, திருமங்கலம், விருதுநகர் போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் சென்று படித்து வருகின்றனர்.

தரைப்பாலம்

இவர்கள் மோட்டார் சைக்கிளிலும், பஸ்களிலும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் காரியாபட்டியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் எம். இலுப்பைகுளம் விலக்கு அருகே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது கிராவல் மண்களை கொட்டி சீரமைத்து வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் சென்று கிராவல் மண்கள் அரித்து சென்று விடுகின்றன. மீண்டும் இந்த தரைப்பாலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மேம்பாலம்

இந்த தரைப்பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் பல பேர் எந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பாலத்தை மேம்பாலமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைதுறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story