சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி


சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
x

சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள கொட்டங்குளம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். . இந்தப்பகுதியில் கடலை, பருத்தி, வெங்காயம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொட்டங்குளம் கிராமத்திலிருந்து மேலகள்ளங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இந்த வழியாக எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி இந்த சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story