சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
விருதுநகர் அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளம் கிராமம் உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்கு அருகே உள்ள விருதுநகருக்கு தான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆனால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தார்ச்சாலை என்ற சுவடே தெரியாதபடி இந்த சாலை கற்குவியலாக காட்சியளிக்கின்றது. மழை பெய்தால் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
அதிகாரிகள் நடவடிக்கை
சேதமடைந்த இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் அடிக்கடி பழுதாகின்றன. இதேபோன்று கே.கே.எஸ்.எஸ்.என்.நகரில் இருந்து குமராபுரம், ரெங்கநாதபுரம், நிமலப்பட்டி செல்லும் சாலையும் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.
எனவே இந்த பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த இந்த சாலைகளை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என ெபாதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.