அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி


அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி
x

அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரம்பலூரில் ஒரு சில பகுதிகளில் நேற்று மாலை அறிவிக்கப்படாமல் 2 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மின் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாயினர். பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டதால் அப்பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்தப்பகுதிக்கு மின்சாரம் வினியோகித்தது குறிப்பிடத்தக்கது. எனவே தடையின்றி மின்சாரம் வினியோகிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story