தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம்


தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம்
x

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் நேற்று தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருநெல்வேலி

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் நேற்று தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறையில் இருந்து தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கியம்மன் கோவில் படித்துறைகள், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதலிலே பொதுமக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தங்கள் முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படைத்து வழிபட்டனர். இதனையொட்டி மாநகர போலீசார் தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்னர்.

பாபநாசம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாபநாசத்திற்கு வந்து குவிந்தனர். தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

இதனால் பாபநாசம் கோவில் படித்துறை, மண்டபம், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தில் அலைமோதி காணப்பட்டது. இதையொட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story