பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி


பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி
x

நெல்லை டவுனில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பகுதியில் உள்ள கோவில் நிர்வாகி ஒருவரை சிலர் நேற்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததன்பேரில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story