கள்ளக்குறிச்சி அருகேமதுவில் விஷம் கலந்து குடித்து மக்கள் நல பணியாளர் தற்கொலைபோலீசார் விசாரணை


கள்ளக்குறிச்சி அருகேமதுவில் விஷம் கலந்து குடித்து மக்கள் நல பணியாளர் தற்கொலைபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

மக்கள் நலப்பணியாளர்

கள்ளக்குறிச்சி அருகே வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 57). இவர் அதே பகுதியில் மக்கள் நலப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் குழந்தைவேல் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் தனது உறவினர் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விரைந்து வந்து, குழந்தைவேலை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தைவேலு நேற்று இறந்து போனார். இதுகுறித்து அவரது மகன் செல்வகணபதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடல் நலக் கோளாறு காரணமாக குழந்தைவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story