வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு


வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
x

திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 259 வாக்கு சாவடி மையம், ஆம்பூர் தொகுதியில் 245 வாக்கு சாவடி மையம், ஜோலார்பேட்டை தொகுதியில் 267 வாக்கு சாவடி மையம், திருப்பத்தூர் தொகுதியில் 267 வாக்கு சாவடி மையம் என மொத்தம் 1038 வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் ஆட்சேபனைகள், மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் இருந்தால் எழுத்து பூர்வமாக வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் அரசியல் கட்சியினர் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, தேர்தல் பிரிவு தாசில்தார் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story