சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரப்பட்டியல் வெளியீடு


சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரப்பட்டியல் வெளியீடு
x

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரப்பட்டியல் வெளியீடு

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் சொத்துவரி செலுத்தாதவர் விவரப்பட்டியலை நகராட்சி வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை பலகை

பட்டுக்கோட்டை நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு பலமுறை அறிவிப்பு கொடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் சொத்து வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களிடம் பலமுறை எடுத்து கூறினர். மேலும் சொத்துவரி செலுத்த தவறும் பட்சத்தில் உங்களது பெயர்கள் நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பலகையாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் சொத்து வரி செலுத்தாமல் பலர் இருந்தனர்.

விவரப்பட்டியல் வெளியீடு

இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி தமிழ்நாடு மாவட்ட நகராட்சி 1920-ன் படி நகராட்சிக்கு ஓராண்டுக்கு மேலாக சொத்து வரி செலுத்த தவறியவர்களின் விவரப்பட்டியலை ஆன்லைன் மற்றும் பொது இடத்தில் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி பட்டுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகளில் சொத்துவரி செலுத்த தவறியவர்களின் விவரப்பட்டியலை வெளியிட்டது.

பிளக்ஸ் போர்டு

அதன்படி பஸ் நிலையம் அருகில், மணிக்கூண்டு, தலைமை தபால் நிலையம் அருகில், அறந்தாங்கி ரோடு முக்கம் காந்தி சிலை என நகரின் முக்கிய வீதிகளில் நகராட்சி சார்பில் சொத்து வரி செலுத்த தவறியவர்களின் பெயர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.


Next Story