உத்தேச வாக்குப்பதிவு மையங்களின் பட்டியல் வெளியீடு


உத்தேச வாக்குப்பதிவு மையங்களின் பட்டியல் வெளியீடு
x

உத்தேச வாக்குப்பதிவு மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத்திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்படியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி-147.) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 332 வாக்குப்பதிவு மையங்களிலும், குன்னம் (148) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குப்பதிவு மையங்களிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை (ஊரக பகுதியில் நகரப்பகுதியில் 1500) கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குமையங்கள் வாக்காளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ளவை, பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குமையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குமையங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பான பணிகள் கடந்த 12-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டன.

அதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 18 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 6 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்கவும், பள்ளி கட்டிடத்தின் பெயர் திருத்தத்தின் காரணமாக, குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடி மையங்களின் பெயர்கள் மாற்றியமைக்கவும், உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி கட்டமாக உத்தேச வாக்குப்பதிவு மையங்களின் பட்டியல் பெரம்பலூர் வாக்குப்பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியரால் கடந்த 29-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரைவு அறிக்கை www.perambalur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தங்களது கருத்து மற்றும் ஆட்சேபைனகள் ஏதேனும் இருப்பின் வருகிற 6-ந் தேதிக்குள் எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் தெரிவித்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story