பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு


பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 16 Aug 2022 5:44 AM GMT (Updated: 16 Aug 2022 5:47 AM GMT)

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் "1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.


பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் "1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்முடி கூறியதாவது ;

வரும் 20-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.மாணவர்கள் http://tneaonline.org இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம் .வரும் 20 முதல் 23-ம் தேதி வரை 7.5% இட ஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.வரும் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுகடந்த ஆண்டைக் காட்டிலும் 36,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்""7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 22,587 மாணவர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர், இவர்கள் அனைவருமே அரசுப்பள்ளியில் படித்தவர்கள்.

விளையாட்டுப் பிரிவின் கீழ் 1,258,முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 970, மாற்றுத் திறனாளிகள் 203 பேரும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர்"தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ,வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19-ம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம்.

குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்""7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் கூறினார்.


Next Story