'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கரப்பாடியில் புதர்மண்டிய பயணிகள் நிழற்குடை சீரமைப்பு-பயணிகள் மகிழ்ச்சி


தினத்தந்தி செய்தி எதிரொலி:  கரப்பாடியில் புதர்மண்டிய பயணிகள் நிழற்குடை சீரமைப்பு-பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக கரப்பாடியில் புதர்மண்டிய பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக கரப்பாடியில் புதர்மண்டிய பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதர்மண்டிய நிழற்குடை

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஏ.நாகூர் ஊராட்சியில் உள்ள கரப்பாடி கிராமத்தில் பூசாரிபட்டி செல்லும் ரோட்டில் கடந்த 2010-2011-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.85 ஆயிரம் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது அந்த பயணிகள் நிழற்குடை முழுவதும் புதர் சூழ்ந்து இருந்தது. இதனால் பயணிகள் அமரவும், உள்ளே காத்திருக்கவும் பயன்படுத்த முடியாமல் இருந்தனர். மேலும், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியோர், கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி ஆகியோர் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அந்த வழியாக தினந்தோறும் உடுமலை, தாராபுரம், பழனி, பொள்ளாச்சி, நெகமம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல 100-க்கும் மேறபட்ட வாகனங்கள் மற்றும் பஸ்கள் சென்று வருகின்றன.

வெட்டி அகற்றம்

இதனால் அந்த இடத்தில் பயணிகள் நின்று பஸ் ஏறுவதற்கும், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கவும் ஏதுவாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் பஸ் மற்றும் போக்குவரத்து ஏதும் வராத நிலையில் இருந்ததால் அதை யாரும் பயன்படுத்தவில்லை.

இதனால் அப்பகுதி முழுவதும் முட்கள் முளைத்து, புதர்கள் சூழ்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு இதுபோன்ற நிழற்குடையை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்றி, நிழற்குடை முழுவதும் வர்ணம் பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. மேலும் இதுபற்றிய செய்தி படத்துடன் தினத்தந்தி நாளிதழில் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள், பயணிகள் நிழற்குடையை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு நன்றி தெரிவித்தனர்.


Next Story