புது கண்மாயில் மீன்பிடி திருவிழா


புது கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

புது கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் புது கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் திரண்டனர். இதையடுத்து புதுக்கண்மாய் கரையில் உள்ள மடையில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். பின்பு வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கிராம மக்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த ஊத்தா, தூரி, கச்சா, வலை, உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி, கட்லா உள்ளிட்ட பல வகை மீன்களை பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டில் சமைத்து சாப்பிட்டனர்.


Next Story