புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம்
வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.
கோயம்புத்தூர்
ஆனைமலை
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் அழுக்கு சாமியார் கோவில் உள்ளது. அங்கு அழுக்கு சாமியாரின் ஜீவ சமாதி இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சித்தருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சீடராக உள்ளார். அவர் அழுக்கு சாமியார் கோவிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அழுக்கு சாமியார் கோவிலுக்கு வந்தார். அங்கு சுவாமியை சிறப்பு தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாகி புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story